ETV Bharat / city

வேலை கேட்டு வந்து லாரியை திருடிச் சென்றவர் கைது! - avadi police

சென்னை: ஆவடியில் லாரி ஓட்டுநர் வேலை கேட்பது போல வந்து லாரியை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலை கேட்டு வந்து லாரியை திருடி சென்றவர் கைது!
author img

By

Published : Jun 2, 2019, 12:21 PM IST

ஆவடி கோவர்த்தனகிரி பொதிகை நகர் பவானி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனி (42). இவர் இதே பகுதியில் லாரி போக்குவரத்து சேவை நடத்திவருகிறார்.

கடந்த 27ஆம் தேதி பழனி வழக்கம்போல் தனது பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த இளைஞர் ஒருவர், பழனியிடம் தன்னை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சுப்பிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை (34) என்று அறிமுகம் செய்துகொண்டார்.

பின்னர், தனக்கு நன்றாக லாரி ஓட்டத் தெரியும் என்றும், தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பழனி ஓட்டுநர் உரிமத்தை கொண்டு வந்தால் வேலை தருவதாக பழனியும் கூறியுள்ளார்.

அதைக் கொண்டு வருவதாக கூறிவிட்டு ராஜதுரை சென்றதுபோல் காட்டிகொண்டார். மதியம் ஆனதும் பழனி அருகில் உள்ள தன் வீட்டுக்கு சாப்பிடச் சென்ற சமயத்தில் லாரி நிறுத்ததிலிருந்து ஒரு மினி லாரியை ராஜதுரை கடத்திக்கொண்டு மாயமானார்.

இது குறித்து பழனி, ஆவடி காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த இளைஞரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் ராஜதுரை, லாரியை கடத்திக் கொண்டு போய் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும், அதனை விற்று பணம் சம்பாதிக்க இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

வேலை கேட்டு வந்து லாரியை திருடி சென்றவர் கைது!

இதையடுத்து காவலர்கள் அந்த இடத்திற்கு சென்று லாரியை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ராஜதுரையை பூந்தமல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலர்கள் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Intro:ஆவடியில் லாரி ஓட்டுநர் வேலை கேட்பது போல கேட்டு லாரியை திருடி சென்ற நபரை கைது செய்து காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

Body:ஆவடி கோவர்த்தனகிரி பொதிகை நகர் பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி/42 இவர் இதே பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். கடந்த 27ஆம் தேதி பழனி தன டிரான்ஸ்போர்ட் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பழனியிடம் தன்னை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சுப்பிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை/34 என லாரி டிரைவர் அறிமுகம் செய்துகொண்டார். மேலும் அவரிடம் தனக்கு லாரி நன்றாக ஓட்டத் தெரியும் என்னை உங்கள் டிரான்ஸ்போர்ட் வேலைக்கு சேர்த்து கொள்ளுங்கள் என ராஜதுரை கேட்டுள்ளார். அதற்கு அவர் உன்னுடைய ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை கொண்டு வந்தால் வேலை தருவதாக கூறியுள்ளார்.பின்னர் மதியம் பழனி அருகில் உள்ள வீட்டுக்கு சாப்பிட சென்றார். அந்த சமயத்தில் ராஜதுரை டிரான்ஸ்போர்ட்டில் இருந்து ஒரு மினி லாரியை கடத்தி கொண்டு மாயமானார். இதுகுறித்து பழனி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் ராஜா எஸ். ஐ ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை தீவிரமாக தேடி வந்தனர்.இதற்கிடையில் இன்று மதியம் ஆவடி பஸ் நிலையத்தில் ராஜதுரை சுற்றித்திரிந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் ராஜதுரையை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் லாரியை கடத்தி கொண்டு போய் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும் அதனை விற்று பணம் சம்பாதிக்க முயற்சி செய்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் ராஜதுரையை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்தில் நிறுத்தி வைத்த லாரி பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீசார் ராஜதுரையை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி இதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Conclusion:இதனையடுத்து போலீசார் ராஜதுரையை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி இதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.