சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசில் குரூப்-1இல் தேர்வாகி வந்த அலுவலர்களுக்கும் ஐஏஎஸ் அந்தஸ்து தரலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கு அமைச்சர் பிடி ஆர் தியாகராஜன் அவது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
நீதிமன்ற ஆலோசனைப் படி அனைத்து குரூப் 1 அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெற தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க பரிசீலிக்க வேண்டும் என வழங்கியிருந்தது. ஐஏஎஸ் அந்தஸ்து பெற அனைத்து குரூப் 1 அதிகாரிகளையும் இணைத்து தமிழ்நாடு ஆட்சிப்பணி உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் துறையினர் 7-8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் நிலையில், பிறதுறைகளில் உயர்ந்த பதிவில் இருந்தாலும் ஐஏஎஸ் அந்தஸ்து பெற 30 ஆண்டுகள் தேவைப்படுகிறது என நீதிபதி எம் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். குரூப் 1 தேர்வு மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தங்களை மாநில சிவில் சர்வீசேர்க்க கோரி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அமைச்சர் ட்விட்டட்ரில் கருத்து: இது குறித்து தமிழ்நாடு வருமானத் துறை அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் அவரது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், ‘ இதற்கான தகுதிகள் அரசுக்கு இருந்தபோதிலும், உத்தரவில் அரசுக்கு சட்டக் கருத்து தேவை. முன்னதாக சட்டமன்றத்தில் நான் சில முறை கூறியது போல், நீதித்துறை மற்றும் நிறைவேற்று அதிகாரங்களுக்கு இடையேயான பிரிவினை (அரசியலமைப்புச் சட்டத்தில்) வேகமாக அழிந்து வருவதாக கோப்புகள் தெரிவிக்கின்றன. ஒரு ஜனநாயகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மட்டுமே கொள்கையை உருவாக்க முடியும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!