ETV Bharat / city

ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் வசதிகள் செய்தால் சிறை தண்டனை! - சென்னை

ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் வசதிகள் செய்து இயக்கினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Omni buses viloation, omni buses tamilnadu, ஆம்னிப் பேருந்துகள், ஆம்னிப் பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசின் புதிய விதிகள்
imprisonment-for-violating-the-rules-by-making-extra-facilities-on-omni-buses
author img

By

Published : Apr 22, 2021, 10:37 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையரகத்தில் ஆம்னிப் பேருந்துகள் பெற்ற பதிவுச் சான்றிற்கு புறம்பாக, வாகனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இயக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக வாகனத்தின் நீளம், அகலம், உயரம், எடை, இருக்கை, படுக்கை அமைப்பு, அவற்றின் எண்ணிக்கை என பல மாற்றங்கள் குறித்த புகார்களும் அதிக அளவில் வருகின்றன.

எனவே, ஆம்னிப் பேருந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் ஆம்னிப் பேருந்துகளை புதிய பதிவு மற்றும் மறு பதிவு செய்த பொழுது, பதிவுச் சான்றில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதனை மீறி மாற்றங்கள் செய்து இயக்கினால் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 52, பிரிவு 182(ஏ)(4)இன் கீழ், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது 6 மாதம் சிறை தண்டனை அல்லது ஒவ்வொரு மாற்றத்திற்கும் ரூ.5000 அபராதமாகவோ அல்லது சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.

மேலும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 207, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி எண் 421இன் படி வாகனம் சிறைபிடிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகின்றது" என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோடைகால வெப்பம் - பாதுகாத்து கொள்வது எப்படி? - விளக்குகிறார் மருத்துவர் நர்மதா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.