உணவுத் துறை அலுவலர்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு
மத்திய உணவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழு நெல்லில் உள்ள ஈரப்பதம் தொடர்பாக இன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
புதிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் முதல் கூட்டம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சிப் பகுதி உறுப்பினர்கள் ஆகியோரின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள அரசு சார்ந்த அனைத்து டாஸ்மாக், பார்களுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்துள்ளது.
மழை பெய்யக்கூடிய இடங்கள்
வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.