ETV Bharat / city

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு - விஜய் சேதுபதி மனு

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

News Today
News Today
author img

By

Published : Jan 4, 2022, 7:43 AM IST

Updated : Jan 4, 2022, 1:37 PM IST

ஹைதராபாத் : நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குகோரி விஜய் சேதுபதி மனு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல், வடகிழக்கு மாநிலங்கள் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம், 202 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட் என இன்றைய முக்கிய செய்திகளின் சுருக்கம் இதோ.

  1. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்: தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் தொகுப்புகள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. தைப் பொங்கலை முன்னிட்டு சர்க்கரை, பச்சரி உள்ளிட்ட 21 பொருள்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
    Important state and national events to look for today
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
  2. மேகாலயா, திரிபுரா செல்லும் பிரதமர்: பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுராவுக்கு இன்று செல்கிறார். அந்த மாநிலங்களில் சாலை கட்டமைப்பு, குடிநீர், நகர்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 13 திட்டங்களை தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து ரூ.1700 கோடி 5 தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி
  3. சிறப்பு முகாம்: அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது.

    தொழிலாளர்கள் (கோப்புக் காட்சி)
  4. விஜய் சேதுபதி மனு: பெங்களூரு விமான நிலையத்தில் மகாகாந்தி என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜன.4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

    நடிகர் விஜய் சேதுபதி
  5. இந்தியா ஆல்அவுட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

    அஸ்வின்

இதையும் படிங்க : ஜன.4 இன்று நாள் எப்படி.. யாருக்கு அதிருஷ்டம்!!

Last Updated : Jan 4, 2022, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.