தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வெப்பச்சலனம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு வரும் நாட்களில்களில் குறையும் எனவும், அதேவேலை வெப்பச்சலனத்தின் காரணமாக மழையின் தாக்கம் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால் பகுதியில் 9 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 செ.மீ, நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 4 செ.மீ, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சிலப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குளிர் காலத்தைச் சமாளிப்பது எப்படி? அசத்தலான டிப்ஸ்கள்!