ETV Bharat / city

வெப்பச்சலனம்: இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு பெய்யும்!

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம்
மழை
author img

By

Published : May 20, 2021, 1:37 PM IST

இதுதொடர்பாக இன்று (மே.20) வெளியிட்ட அறிவிப்பில்," நாளை(மே.21), நாளை மறுதினம்(மே.21) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 23,24 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (செ.மீட்டரில்):

கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி) 10, திருச்சிராப்பள்ளி டவுன் 7, வீரகனூர் (சேலம்), க்ளென்மோர்கண் (நீலகிரி), திருப்பத்தூர் (சிவகங்கை), குழித்துறை (கன்னியாகுமரி), பெரம்பலூர், கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, நத்தம் (திண்டுக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 4, மெளலத்தூர் (வேலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 3, டேனிஷ்பேட்டை (சேலம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), புளிப்பாட்டி (மதுரை) தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வரும் 22,23 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என, அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.