ETV Bharat / city

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: கி.வீரமணி கண்டனம் - இலங்கை குண்டு வெடிப்பு

சென்னை: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

veeramani
author img

By

Published : Apr 22, 2019, 3:02 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று இலங்கையில் சர்ச்சுகளிலும், இரண்டு ஓட்டல்களிலும் குண்டுவெடித்து, 290 பேர் உயிரிழந்துள்ளனர்; 500 பேர்களுக்குமேல் காயம் என்ற உள்ளத்தை உலுக்கும் அதிர்ச்சி செய்தி மீளாத் துயரத்தை அகிலத்திற்குத் தந்துகொண்டுள்ளது. இதற்கான குற்றப் பின்னணிகள் குறித்து மிக முக்கியமாக விசாரணை செய்யப்பட்டு, உண்மைகள் வெளியாக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் மிக மிக மெல்ல மறுவாழ்வு நோக்கிச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு கொடூர நிகழ்வு, திட்டமிட்டு நடத்தப்படுவது சிறுபான்மைச் சமுகத்தினரை மிரட்டவா? மதவெறியா? அச்சுறுத்தலா? அல்லது சிங்கள அரசியல் போட்டியின் விளைவா? என்று பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.

இறந்தவர்களில் பெரும்பாலும் சிறுபான்மையினரும், தமிழர்களுமேயாவர் என்பதும் கவனத்துக்குரியதே! எப்படியிருப்பினும், நாகரிக மனித சமூகம் இதனை ஏற்கவே ஏற்காது. மதவாதம் அங்கே வேறு வடிவத்தில் அதன் கோரப் பற்களுக்கு இரை தேடியது உலகறிந்த உண்மை. இதனைப்பற்றிய முழு உண்மைகளும், காரணமும் கண்டறியப்படவேண்டும். உயிரிழந்தோருக்கு எமது ஆழ்ந்த இரங்கல். உயிர்கள் என்பவை பகுத்தறிவாளர்களுக்கு ‘யாதும் உயிரே, யாவரும் மனிதர்களே’ என்பதுதான். மிகுந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

நேற்று இலங்கையில் சர்ச்சுகளிலும், இரண்டு ஓட்டல்களிலும் குண்டுவெடித்து, 290 பேர் உயிரிழந்துள்ளனர்; 500 பேர்களுக்குமேல் காயம் என்ற உள்ளத்தை உலுக்கும் அதிர்ச்சி செய்தி மீளாத் துயரத்தை அகிலத்திற்குத் தந்துகொண்டுள்ளது. இதற்கான குற்றப் பின்னணிகள் குறித்து மிக முக்கியமாக விசாரணை செய்யப்பட்டு, உண்மைகள் வெளியாக்கப்பட வேண்டும். 

ஈழத் தமிழர்கள் மிகமிக மெல்ல மறுவாழ்வு நோக்கிச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு கொடூர நிகழ்வு, திட்டமிட்டு நடத்தப் பெறுவது, சிறுபான்மைச் சமுகத்தினரை மிரட்டவா? மதவெறியா? அச்சுறுத்தலா? அல்லது சிங்கள அரசியல் போட்டியின் விளைவா? என்று பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று! இறந்தவர்களில் பெரும்பாலும் சிறுபான்மையினரும், தமிழர்களுமேயாவர் என்பதும் கவனத்துக்குரியதே!
எப்படியிருப்பினும், நாகரிக மனித சமுகம் இதனை ஏற்கவே ஏற்காது.
மதவாதம் அங்கே வேறு வடிவத்தில் அதன் கோரப் பற்களுக்கு இரை தேடியது உலகறிந்த உண்மை!
இதனைப்பற்றிய முழு உண்மைகளும், காரணமும் கண்டறியப்படவேண்டும்.
உயிரிழந்தோருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்; குடும்பத்தினருக்கு ஆறுதல்!
உயிர்கள் என்பவை பகுத்தறிவாளர்களுக்கு ‘யாதும் உயிரே, யாவரும் மனிதர்களே’ என்பதுதான். மிகுந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் திருச்சி துறையூர் கோயிலில் நடைபெற்ற சமபவத்திற்கு, “ திருச்சி துறையூர் அருகில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் ‘சாமி’ சிலையிடம் வைக்கப்பட்ட காசுகளை வாங்கினால், ஏராளம் பணம் சேரும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாகத் திரண்ட பக்தர்களில் - இடிபாடுகள் காரணமாக ஏழு பேர் மூச்சுத் திணறி உயிரிழந்த கொடுமை எப்படிப்பட்ட மூடநம்பிக்கை வாங்கிய உயிர்ப் பலி என்பது புரியவில்லை.

இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அதேநேரத்தில், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் அருமையை - தேவையை மக்கள் உணரவேண்டும். கழகத்தின் பிரச்சாரத்துக்குத் தடையாக காவல்துறையும், காவிகளும் கைகோர்த்து நிற்பது இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் துணை போவதாகும் என்பதை இப்பொழுதாவது உணரவேண்டும். இம்மக்கள் திருந்தியிருந்தால், வாழவேண்டிய மனிதர்கள் இப்படிப்பட்ட மரணத்தைச் சந்திக்கும் அவலம் நிகழ்ந்திருக்குமா?
‘‘பக்தி வந்தால் புத்தி போகும்‘’ என்று தந்தை பெரியார் கூறியது - எவ்வளவுப் பெரிய நூற்றுக்கு நூறு உண்மை பார்த்தீர்களா?
அரசு  அரசியல் சட்டமாகவே செய்துள்ள - றிவியல் மனப்பான்மையை வளர்க்கும் எங்கள் பணியை காவல்துறைமூலம் தடுப்பதால், இத்தகைய விபத்தும், வேதனையும் ஏற்படும் நிலை. இனியாவது அரசும், காவல்துறையும் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தாராள அனுமதி வழங்கி, அவர்கள் பணியை இலகுவாக்கிக் கொள்ள முன்வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.