ETV Bharat / city

இளையராஜா பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த தடை - உயர் நீதிமன்றம் - இளையராஜா வழக்கில் தனி நீதிபதி அனிதா சுமத் தீர்ப்பு

இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ilayaraja Songs patent issue
Ilayaraja Songs patent issue
author img

By

Published : Feb 18, 2022, 1:33 PM IST

சென்னை: ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (பிப். 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார்.

பதிப்புரிமை

தனி நீதிபதி, சட்டப்பிரிவு 14இல் 'பதிப்புரிமை' என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார் என்றும், இசைப் பணியைப் பொறுத்தவரை பதிப்புரிமை என்பது 'எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருள் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு' பிரத்யேக உரிமையாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்ததுடன் வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்கள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: எதிலும் காதல்... ஆதரவு நாடும் தன்பாலின காதலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.