சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவரான கொச்சியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எரிந்த நிலையில் இருந்த அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்துவருகின்றனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உன்னிகிருஷ்ணன் ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் கோ-ஆர்டினேட்டராக ஐஐடி வந்து சொல்லிக்கொடுத்து வருபவர் என்றும், இன்று காலை ஐஐடி வந்தவர் இரவு 9 மணியளவில் எரிந்த நிலையில் கண்டுடெக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.