தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் தலைமை ஆசிரியர் பணியில் ஏற்படும் காலிப் பணியிடத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு 5 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்றால், இடைநிலை ஆசிரியர் மூலம் நடத்தத் தொடக்கக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்புள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 18ஆம் தேதி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் ஆசிரியர் நலன், கல்வி நலன், மாணவர் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை தொடக்கக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் உறவினர் வீட்டில் நகை திருட்டு - காவலாளி கைது!
பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 18ஆம் தேதி வருவாய் மாவட்டத்திற்குள் நடைபெற்றது. பின்னர் ஒன்றிய அளவில் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு, ஒன்றிய அளவில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்திருந்த தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
எனவே பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஒன்றிய முன்னுரிமையின்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு தொடக்கக்கல்வி துறை உடனடி அளித்திட வேண்டும். மேலும், 19ஆம் தேதி நடைபெற்ற ஆரம்பப்புள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு ஏற்பட்ட ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 5 மாணவர்களுக்குக் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் காலியாக இருந்த தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்: தமிழ்நாடு அரசு அரசாணை!
ஐந்து மாணவர்களுக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது என்று எந்த விதமான எழுத்து மூலமான உத்தரவையும் தொடக்கக் கல்வித்துறை பிறப்பிக்கவில்லை. ஆனால் உயர் அலுவலர்களின் வாய்மொழி உத்தரவு என்று கூறி மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை எதிர்நோக்கிக் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
தற்போது ஐந்து மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஏற்கனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அப்பள்ளிகள், மேலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே அப்பள்ளிகளின் நலன் கருதி இந்த கலந்தாய்விலேயே தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தொடக்கக் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்களே வாருங்கள் - செங்கோட்டையன்
ஆனால் ஒரு பள்ளியில் ஒரு வகுப்பிற்கு தலா ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது என்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். தொடக்கக்கல்வித்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் தொடர்ந்து மாணவர்களைச் சேர்க்க வேண்டும் எனக் கூறினாலும், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாணவர்களைச் சேருங்கள் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் தங்களின் பதவி உயர்விற்காகக் கோரிக்கை அளிக்கும் ஆசிரியர்கள் ஏழை மாணவர்களின் கல்வித் தகுதியை வளர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.