ETV Bharat / city

சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமான வழக்கு: அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு உள் துறைச் செயலர், காவல் துறைத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Feb 25, 2020, 4:20 PM IST

சிலைக்கடத்தல் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து மாயமானது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வுபெற்ற காவல் அலுவலரை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், ஆவணங்கள் மாயமானதாகக் கூறி சிலைக்கடத்தல் வழக்குகளை முடிக்கத் தடைவிதிக்கக் கோரியும், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், சிலைக்கடத்தல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து கையூட்டுப் பெற்றுக் கொண்டு, வழக்கு ஆவணங்களைக் காவல் துறை அலுவலர்கள் திருடியுள்ளதாகத் குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கு ஆவணங்கள் மாயமாகிவிட்டதாகக் கூறி இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் வைரவேல் திருடப்பட்ட விவகாரத்தில் செயல் அலுவலர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக, நீதிபதி பால் ஆணையம் அறிக்கை அளித்தும், அது தற்கொலை என இந்து சமய அறநிலையத் துறை வழக்கை முடித்துவைத்ததாகவும், பின்னர் வைரவேல் கோயில் உண்டியலிலிருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், யானை ராஜேந்திரன் தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தபோது, வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து 2018ஆம் ஆண்டு மனுதாரர் புகாரளித்தும், தற்போதுவரை பதிலளிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போதுதான் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அவற்றை ஆய்வுசெய்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனவும் கோரினார்.

இதனையடுத்து, சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்ய காவல் துறைத் தலைவர், உள் துறைச் செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மாமல்லபுரம் வழக்கு - அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.