ETV Bharat / city

பழங்குடிகள் உரிமைக்காக போராடினால் மாவோயிஸ்டா? - சீமான் கண்டனம் - ஸ்டான் ஸ்வாமி

தேசியப் புலனாய்வு முகமை சட்டத்தின்கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை உடனடியாக விடுதலை செய்ய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

stan
stan
author img

By

Published : Oct 15, 2020, 1:29 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழங்குடியின மக்களின் நலவாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான மனித உரிமை ஆர்வலர், ஸ்டான் சுவாமியை மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு தொடுத்து கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை, முறைகேடாக பயன்படுத்தி தனிமனித வஞ்சம் தீர்க்க ஆளும் வர்க்கம் ஏவக்கூடும் என அப்போதே கடுமையாக எதிர்த்தோம். இன்றைக்கு ஸ்டான் சுவாமி எனும் மக்களின் நலனுக்காக துணைநின்ற பாதிரியாரை கைது செய்து அதனை நிரூபித்திருக்கிறது மத்திய அரசு. பழங்குடியினர் நலனுக்காக போராடியதாலேயே அவரை மாவோயிஸ்டு என முத்திரைக்குத்தி, தளர்ந்த வயதினையும் பொருட்படுத்தாமல் கரோனோ நோய்த்தொற்று காலத்தில் சிறிதும் இரக்கமின்றி அவரை கைது செய்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும்.

அரசுகளுக்கெதிராகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் நீதிமன்றங்கள் மூலம் கடுமையான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஸ்டான் சுவாமியை கைது செய்திருப்பதன் மூலம், நாட்டில் அநீதிக்கு எதிராக குரல்கொடுத்து போராடத் துணியும் சமூக ஆர்வலர்களுக்கும், மண்ணுரிமைப் போராளிகளுக்கும் மறைமுக மிரட்டலை கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆகவே, தேசியப் புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிற மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்“ என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'நான் அரசியலுக்கு வர காரணம் இவர்தான்' - ரகசியத்தை வெளிப்படுத்தும் கமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.