சென்னை: அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படி வழங்கும் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக செப்.22ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மனிதவள மேலாண்மைத் துறை விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்படி திருத்தத்தின் மூலம் மகப்பேறு விடுப்பின்போது பெண் அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்காலம் முழுமைக்கும் தடையின்றி வீட்டுவாடகைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிட்டப்பட்டிருந்த அறிக்கையில் பேறுகால விடுப்பு ஒன்பது மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்ட நிலையில், வாடகைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 1980ஆம் ஆண்டுமுதல் பேறுகால விடுப்பு மூன்று மாத காலம் இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ஆறு மாத காலமாக உயர்த்தப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு அறிவிப்பால் அதிர்ச்சி