ETV Bharat / city

மாணவர்களுக்கு ’2ஜிபி டேட்டா’ - அரசாணை வெளியிட்ட உயர்கல்வித்துறை! - கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

data
data
author img

By

Published : Jan 11, 2021, 7:04 PM IST

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மாணவர்களின் நலனுக்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு, ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு, நாளொன்றுக்கு ’2 ஜிபி டேட்டா’ எல்காட் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு
உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

அதனடிப்படையில் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு அறிவிப்பின் படி அரசு, அரசு உதவி பெறும், தனியார், கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எல்காட் நிறுவனத்தின் மூலம் 2 ஜிபி டேட்டா தினமும் அளிக்கும் வகையில் சிம் கார்டுகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ் அப் கெடுபிடி: டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறும் பயனர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.