ETV Bharat / city

’குடிநீர் ஆலைகளை இழுத்து மூடுங்கள்’ - உயர் நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வணிக நோக்கத்தில் செயல்படும் தண்ணீர் ஆலைகளை இழுத்து மூட தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

company
company
author img

By

Published : Oct 7, 2020, 5:52 PM IST

தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்த பொது நல வழக்கில் கடந்த மார்ச் மாதம் இடைக்கால உத்தரவு ஒன்றை அளித்த நீதிபதிகள், உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் எனவும், கரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்கள் ஏழைகளுக்கு உதவும் வகையில், 15% தண்ணீரை அரசுக்கு வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது எனவும் தெரிவிக்கபப்ட்டது. ஆலைகள் இயங்க அனுமதிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில், 510 நிறுவனங்கள் செயல்பட தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 15% தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை, 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியதாகவும், மீதமுள்ள 367 நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனவும் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை என்றும், உடனடியாக மூட உத்தரவிடலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

மனுதாரர் சிவமுத்து, சென்னையில் மட்டும் விதிகளை மீறி அளவுக்கு மீறி அதிகளவில் தண்ணீர் எடுத்துவரும் 40 நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்தார். இதையடுத்து, இதே போன்று மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், உரிமம் பெறாமலும் புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கிய சலுகையை திரும்பப் பெற்ற நீதிபதிகள், நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கணக்கிடும் கருவிகள் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நவம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பதிலளிக்காமல் காலம் கடத்திவந்த அரசுக்கு அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.