ETV Bharat / city

முதலில் சரண்; பின்னர் பிணை - துணைவேந்தருக்கு நீதிமன்றம் அறிவுரை! - எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன்

சென்னை: விமான டிக்கெட் முறைகேடு புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன் நீதிமன்றத்தில் சரணடைந்து பிணை பெற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

hussain
hussain
author img

By

Published : Nov 27, 2020, 12:06 PM IST

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை துணைவேந்தராக பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். இவர் பணியில் இருந்தபோது 2008 மே மாதம் வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றுள்ளார்.

இதற்காக உயர் வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு, விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்பு அந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மீர் முஸ்தபா உசைன் சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்துவிட்டு, உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாக கூறி மோசடி செய்து, 2 லட்சத்து 22 ஆயிரத்து 332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோன்று பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில், டிக்கெட் கட்டணமாக 7 லட்சத்து 82 ஆயிரத்து 124 ரூபாயை பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் மோசடியாக பெற்றுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி மீர் முஸ்தபா உசைன் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மீர் முஸ்தபா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ விமானக் கட்டணத்திற்கான அந்த வித்தியாசத் தொகையை துணைவேந்தர் செலுத்தி விட்டதாகவும், விசாரணையில் குளறுபடிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும், நீதிமன்றத்தில் சரண் அடைந்தால், அடுத்த நாளே பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மனுதாரரிடம் கலந்தாலோசித்து பதில் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஆணையர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.