ETV Bharat / city

ஆதரவற்ற முதியவர் உடலை பல மணி நேரமாகியும் எடுக்காமல் அவலம் - ஆதரவற்ற முதியோர்

சென்னை: தகவல் தெரிவித்தும் உடல் நிலை சரியில்லாமல் இறந்த ஆதரவற்ற முதியவர் உடலை பல மணி நேரமாகியும் எடுக்காமல் இருந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dead
dead
author img

By

Published : May 11, 2020, 6:23 PM IST

சாந்தோம் தேவாலயம் அமைந்துள்ள குடிச்சேரி சாலையில், ஆதரவற்றோர் பலர் சாலையோரமாக வசித்து வருகின்றனர். அங்கு கேரளாவைச் சேர்ந்த தங்கப்பன் என்ற முதியவரும், கண் பார்வையற்ற மூதாட்டி ஜெயாவும் தள்ளுவண்டி ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். ஊரடங்கால், அக்கம் பக்கத்தில் வாழ்பவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இங்குள்ளவர்களுக்கு உணவளிக்கின்றனர்.

இந்நிலையில், முதியவர் தங்கப்பனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சாலையோரத்தில் வசிப்பவர் என்பதால், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மூதாட்டி வேறு வழி இல்லாமல் உடல்நலக்குறைவுடன் முதியவரை தள்ளுவண்டியிலேயே வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், உடல் நலமின்றி முதியவர் தங்கப்பன் உயிரிழந்தார். அவர் இறந்தது கூட தெரியாத பார்வையற்ற மூதாட்டி ஜெயா, அவருக்கு அருகிலேயே 1 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளார்.

எப்போதும் போல அவருடன் பேசிக்கொண்டும் இருந்துள்ளார் மூதாட்டி. வெகுநேரமாக தானாகவே பேசிக்கொண்டிருந்த மூதாட்டியை கவனித்த அங்குள்ள மற்றவர்கள், தங்கப்பன் இறந்ததை கூறியுள்ளனர். பின்பு அவர்கள், கரோனா அச்சத்தால் உடலை அகற்றாமல் காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 12 மணி நேரத்திற்கும் மேலாக, உடலை எடுக்க யாரும் அங்கு வரவே இல்லை. தள்ளுவண்டியிலே உயிரற்ற அந்த முதியவருடன், பார்வையற்ற மூதாட்டி செய்வதறியாது கண்ணீருடன் அமர்ந்திருந்த காட்சி கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. பின்னர் முதியவர் உடல் நீண்ட நேரத்திற்குப் பிறகு காவல்துறையினரால் அமரர் ஊர்தி மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறந்தவருக்கு கரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்யப்பட்டு, பின்பு அவரது உடல் இடுகாட்டில் புதைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் நடமாடும் வாகன சேவை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.