ETV Bharat / city

'போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' - டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை - New DGP Tripathy Circular

டிஜிபி திரிபாதி
author img

By

Published : Jul 4, 2019, 5:18 PM IST

Updated : Jul 4, 2019, 8:16 PM IST

2019-07-04 17:05:35

சென்னை: காவல்துறையினர் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டுமென புதிய டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற கண்டனத்தை அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக அமலபடுத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்கள் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனவும், ஏன் வாகனத்தை பறிமுதல்செய்யகூடாது எனவும் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடிக்க தவறும் போக்குவரத்து காவலர்கள் மேல் நடவடிக்கை பாய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னையில் போக்குவரத்து போலிசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொதுமக்களை பிடித்து அபராதம் வசூல் செய்யும் காவலர்கள், தாங்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதில்லை என்று பொதுமக்களிடையே புகார் எழுந்து வந்தது. எங்களுக்கு ஒரு நியாயம்.. காவலர்களுக்கு ஒரு நியாயமா..? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்நிலையில், ஹெல்மெட் குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், அனைத்து சரக டிஐஜி, மண்டல ஐஜி-களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "காவலர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 4, 2019, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.