சென்னை: மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி ஃபேஸ்புக் தொடங்கி மோசடி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தனது பெயரில் உள்ள போலி ஃபேஸ்புக் கணக்கை யாரும் அங்கீகரிக்க வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்தப் போலி கணக்கை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அவர் சமூக வலைதளத்தின் வாயிலாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து முக்கியமான ஆளுமைகளின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி மோசடி செய்யும் கும்பல் மீது காவல் துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து ஆற்றில் குதித்த பெண்கள் - உயிரைப் பறித்த போலி முகநூல் கணக்கு!