சென்னை: வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள 13 சிங்கங்களின் கரோனா பரிசோதனையில் பாதிப்பு ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா நிர்வாகம், "பூங்காவிலுள்ள சிங்கங்களின் நாசி, மலக்குடல் திரவ மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக ஜூலை 9, 14ஆம் தேதிகளில் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
இதில் முதலாவதாக அனுப்பப்பட்ட பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பில்லை என்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட திரவ மாதிரிகளின் முடிவிலும் சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பில்லை.
அந்த வகையில், அனைத்து சிங்கங்களும் மீளுருவாக்கம் பெற்று எந்தவொரு கரோனா தொற்று அறிகுறிகளும், சிக்கல்களுமின்றி சீரான உடல் நிலையில் உள்ளன.
இருப்பினும் கரோனா தொற்று பரவுவதைக் கருத்தில்கொண்டு சிங்கங்களின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர், களப்பணியாளர்கள் தொடர்ந்து கவனித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் சிங்கங்கள் பாதிப்பு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவிர கண்காணிப்பு