ETV Bharat / city

11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுதும் குரூப் 2 பணிக்கான ஹால்டிக்கெட் வெளியீடு - 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுதும் குருப் 2 பணிக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

குரூப் 2 பதவியில் உள்ள நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு 21ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்விற்கான ஹால்டிக்கெட்டானது 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேருக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும், அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC
TNPSC
author img

By

Published : May 11, 2022, 5:09 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்விற்கான 116 காலிப்பணியிடங்களையும், குரூப் 2ஏ ஆகியவற்றில் 5 ஆயிரத்து 413 பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு பிப் 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெற்றது. முதல்நிலைத் தேர்வுகள் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்பட உள்ளது.

குரூப் 2 தேர்வு வரும் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 117 வட்டங்களில், 4012 தேர்வு மையங்களில் காலையில் நடைபெறுகிறது. இதற்காக 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வுகள் முடிந்த பின்னர் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: குருப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுப் பணியாளர் தேர்வாணையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.