சென்னை:மெரினா கடற்கரைச் சாலையில் நேற்றைய முன் தினம் இரவு 10.30 மணியளவில் கண்ணகி சிலை அருகே குடிபோதையில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு பெண் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த காவல் துறையினரை நிறுத்திய அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மெரினா கடற்கரை சாலையோரம் தனது கணவருடன் வசித்து வருவதாகவும், தனது கணவரை சில நபர்கள் தாக்கிவிட்டுத் தப்பியோடி விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
அரை நிர்வாண கோலத்தில் குடிபோதையில் இருந்த பெண், அவரது கணவரைச் சமாதானம் செய்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் பேருந்தின் மீது ஏறிய போதை ஆசாமி; வீடியோ வைரல்