ETV Bharat / city

ஜிஎஸ்டி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும்: ஜவுளித்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

ஜவுளிப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி
author img

By

Published : Dec 21, 2021, 2:49 PM IST

சென்னை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், 'தமிழ்நாட்டின் ஜவுளித்தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான விழுக்காடு பங்களிப்பை அளித்து, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியைத் தவிர, கணிசமான வருவாயைப் பெற உதவுகிறது.

தொழில் துறை வளர்ச்சியிலும், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பிலும் இது முன்னோடியாக உள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுநோய் மற்றும் பருத்தி நூல் விலையில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இத்தொழில் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசிக் கூட்டத்தில் ஜிஎஸ்டி ஐந்து விழுக்காட்டிலிருந்து பன்னிரெண்டு விழுக்காடாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஜவுளி உற்பத்தியாளர்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை நுகர்வோருக்கு விலைகளை உயர்த்தும் மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும்.

எனவே, 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்திய நிலையில், அதனை மத்திய நிதித்துறை கவனத்திற்கு மத்திய ஜவுளித்துறை கொண்டு செல்ல வேண்டும் என்றும் வரிவிதிப்பை திரும்பப் பெறவேண்டும் என்றும்' கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் ரூ. 150 கோடியில் புதிய திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.