ETV Bharat / city

மாநராட்சிப் பள்ளிகளில் காலை டிஃபன்... சென்னை மேயர் பிரியாவின் முதல் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? - பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும், மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.

Mayor priya
Mayor priya
author img

By

Published : Apr 9, 2022, 4:44 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் இந்த கூட்டம் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கான கூட்டம், சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

'ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை' எனும் திருக்குறளுடன் தனது முதல் பட்ஜெட் உரையைத் தொடங்கினார், மேயர் பிரியா ராஜன். பின்னர், 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்பில் இருந்த முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு காண்போம்...

  • சென்னையில் மழைநீர் தேங்கி வெள்ளம் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, உலக வங்கி, ஜெர்மன் வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு அரசு ஆகிய அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்று, 1234.88 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள், ரூ.6,234.95 கோடி செலவில் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
  • நிர்பயா நிதியின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளில் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்க ரூ.23.66 கோடி ஒதுக்கீடு
  • மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை; மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்புகாக பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.5.47 கோடி ஒதுக்கீடு
  • மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி வழங்க ரூ.6.91 கோடி ஒதுக்கீடு
  • 28 பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்த ரூ.76.27 கோடி ஒதுக்கீடு
  • சென்னை மாநகராட்சியில் புதிதாக மூன்று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும், படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • மாநகர் முழுவதும் கொசு ஒழிப்புக்காக ரூ.4.62 கோடி ஒதுக்கீடு
  • வீடற்றவர்கள் தங்குவதற்காக புதிதாக மூன்று காப்பகங்கள் உருவாக்க ரூ.2.40 கோடி ஒதுக்கீடு
  • மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்கள் தங்குவதற்கும், சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு
  • மாநகரில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொண்டு, மாதம் 100 டன் அளவு உரம் தயாரித்து சந்தைப்படுத்தப்படும்
  • கழிவுகள் கொண்டு உயிரி எரிவாயு (bio-gas) உற்பத்தி செய்ய புதிதாக 6 நிலையங்கள் அமைக்கப்படும்
  • மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர சாய்தளப் பாதை அமைக்கப்படும்
  • சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் ரூ.16.35 கோடி ஒதுக்கீடு
  • சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் மாநகர் முழுவதும் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
  • தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நிர்பயா திட்ட நிதிகளைக் கொண்டு, 366 இடங்களில் உள்ள 918 கழிப்பிட இருக்கைகள் மற்றும் 671 சிறுநீர் கழிப்பான்கள் ரூ.36.34 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
  • சென்னை 2.0 திட்டத்தில் மாநகரை அழகுப்படுத்த 26 இடங்களில் நீரூற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு
  • சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை டிஜிட்டல் முறையில் மாற்ற ரூ.8.43 கோடி ஒதுக்கீடு
  • டிஜி லாக்கர் (Digi locker) வழியாக வர்த்தக உரிமங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதி உருவாக்கப்படும்
  • சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க e-office தொடங்கப்படும்
  • நவீன QR குறியீட்டினை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரி செலுத்த வழிவகை செய்யப்படும்
  • சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மிகப்பெரிய குளங்கள் புனரமைப்புக்கு ரூ.143 கோடி ஒதுக்கீடு

இந்த பட்ஜெட் உரையைத் தொடர்ந்து, நிதிநிலை வரவு செலவுகளை கணக்குக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.

அதில், 2022-23ஆம் நிதியாண்டில் வருவாய் வரவு ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613 கோடியாகவும், மூனதன வரவு 2528.80 கோடியாகவும், செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என தெரிவித்தார். இதன்படி சென்னை மாநகராட்சிக்கான நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.770.02 கோடியாக இருக்கும் என உத்தேசிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய BBsc பட்டப்படிப்பு அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.