சென்னை: 5 சவரன் நகை வைத்துள்ளவர்களின் பட்டியலை தயார் செய்ய கூட்டுறவு துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் கீழ் நகை வைத்துள்ளவர்களின், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் உரிய நபர்களின் பட்டியலை கண்டறிந்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக அலுவலர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதில் ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் வைத்துள்ள நகைக் கடன் மட்டுமே தள்ளுபடி எனவும் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும், அதிக சொத்துள்ள நபர்கள் எவரேனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனரா என்பதையும் சரிபார்த்து, முழு விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.