பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்கள், இணையசேவை பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் சைபர் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் குற்றங்களைத் தடுக்கப் பல்வேறு விழிப்புணர்வுகளை காவல் துறையினர் வழங்கிவருகின்றனர்.
பெருகிவரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும்பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக ஏடிஜிபி தலைமையில் தனிக் குழுவும் நியமனம்செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும், சைபர் குற்றப்பிரிவில் பணியாற்ற விருப்பம் உள்ளோரின் விண்ணப்பமும் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் 36 மாவட்டங்கள், ஏழு மாநகராட்சிகள் உள்பட 46 புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு எதிரே நகரும் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்'