ETV Bharat / city

'வலுவான மாநில அரசுகளாலேயே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்!'

வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த இந்த அரசு உறுதியாக உள்ளது.

பன்வாரிலால் புரோகித்
பன்வாரிலால் புரோகித்
author img

By

Published : Jun 21, 2021, 2:12 PM IST

கரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நீட், வேளாண் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

தொடர்ந்து பேசிய அவர், "தந்தை பெரியார் காண விரும்பிய சுய மரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதியேற்றுள்ளது. சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும்.

கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்துவதில் உறுதி

அனைத்து மக்களும் சேர்ந்த எமது அரசு என்ற பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் திமுக அரசு தனது பயணத்தைத் தொடரும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டுவருகிறது.

பன்வாரிலால் புரோகித்
பன்வாரிலால் புரோகித்

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு கொள்கை, காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது. வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த இந்த அரசு உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 24ஆம் தேதி வியாழன் வரை 3 நாள்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் நாளை தொடங்குகிறது.

இதையும் படிங்க: 'நீட், வேளாண் சட்டம் ரத்து, தமிழுக்கு முன்னுரிமை, நிதித் துறை குழு' - ஆளுநர் உரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.