புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்க கூடுதலாக 3 முட்டைகள் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (பிப்.24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் 855 அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்பட்டுவருகிறது.
![Puducherry governor, supplimentary nutrition for puducherry children, Tamilisai Soundararajan, puducherry news, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-03-governor-tgamilisai-oress-tn10044_24022021125627_2402f_1614151587_257.jpg)
இக்குழந்தைகளின் புரதச்சத்தின் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வீதம் வழங்கப்படுவதை உயர்த்தி வாரம் மூன்று முட்டைகள் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அரசுத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் 29,846 குழந்தைகள் பயன்பெறுவார்கள். புதுச்சேரி அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1.68 கோடி கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை