ETV Bharat / city

'விவசாயிகள் சோலார் மின் உற்பத்தி செய்ய அரசு ஊக்குவிக்கும்' - அமைச்சர் தங்கமணி

author img

By

Published : Feb 19, 2020, 12:36 PM IST

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலமாக விவசாயிகள் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேரவையில் தெரிவித்தார்.

minister thangamani, அமைச்சர் தங்கமணி
minister thangamani, அமைச்சர் தங்கமணி

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி மேற்கொண்டால் மின் பகிர்மானக் கழகத்திற்கும், விவசாயிகளுக்கும் ஏதுவாக இருக்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ”மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான விலையையும் நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது.

முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் விவசாயிகள் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ளலாம். அந்தத் திட்டத்தை அரசு ஊக்குவிக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேலவளவு படுகொலை: 13 பேரின் முன்விடுதலை வழக்கின் இடைக்கால உத்தரவுகள் வாபஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.