தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் மாத இறுதி நாள்களில் பாமாயில் கிடைப்பதில்லை எனப் புகார்கள் வந்ததை அடுத்து, பாமாயில் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆணையில், “மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்க, 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுகிறது.
இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் மாத இறுதி நாள்களில் பாமாயில் கிடைப்பதில்லை எனப் புகார்கள் வந்ததை அடுத்து, பாமாயில் கொள்முதல் செய்ய 47.22 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அக்டோபர் மாதம்முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாமாயில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள் வெளியேற தேவையில்லை: நீதிமன்றம் இடைகாலத் தடை