சென்னை: அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருபவர் கார்த்திக் (21). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் பழைய சென்ட்ரல் சிறைச்சாலை இருந்த பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (பிப்ரவரி 3) மாணவர்கள் அனைவரும் பேசிவிட்டு தூங்கச் சென்றுள்ளார். மாணவர்கள் அனைவரும் காலையில் எழுவதற்குள் முன்கூட்டியே எழுந்து விடுதியை விட்டு வெளியேறிய கார்த்திக், தனது வாட்ஸ்அப் குழுவில் ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு எங்குப் புறப்பட்டுச் சென்றார் என்பது தெரியவில்லை.
இதையடுத்து குழுவுக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்த மாணவர்கள் விடுதி நிர்வாகிகளுக்குத் தெரிவித்துள்ளனர். இது குறித்து நிர்வாகம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவன் கார்த்திக் தன்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டாரா அல்லது வேறு எங்காவது சென்றாரா? என செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சட்ட விரோத தற்காலிக நியமனங்கள் மீது நடவடிக்கை தேவை - அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்