தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்ப வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது, தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டதை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும், பல்வேறு மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள ஊதிய வெட்டு, சரண் விடுப்பு ரத்து, வேலை நியமனத் தடை, அகவிலைப்படி உயர்வு ரத்து, பயணப்படி மற்றும் விடுப்பு கால சலுகைகள் ரத்து போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட, தென் சென்னை மாவட்ட அளவில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் அனைவரும் தகுந்த இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கரோனா: மருத்துவமனைகளில் விஜயபாஸ்கர் ஆய்வு