ETV Bharat / city

தண்ணி காட்டும் தங்கம், ஆறுதல் அளித்த வெள்ளி! - விலை நிலவரம்

தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.8 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35 ஆயிரத்து 920க்கு விற்பனையாகிறது.

Gold rate in chennai Today
Gold rate in chennai Today
author img

By

Published : Jul 6, 2021, 11:12 AM IST

Updated : Jul 6, 2021, 11:19 AM IST

ஹைதராபாத் : வாரத்தின் முதல் நாள் வர்த்தக தினமான திங்கள்கிழமை விலை சரிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 அதிகரித்து சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (ஜூலை 6) ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.35 ஆயிரத்து 920க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது ரூ.80 அதிகரித்துள்ளது.

இது மட்டுமின்றி கடந்த 10 நாள்களுடன் ஒப்பிடும்போது அதிகப்பட்ச விலை உயர்வு இதுவாகும். 24 காரட் தூய தங்கமும் கிராம் ஒன்றுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 840 ஆக உள்ளது.

வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விற்பனை விலையை காட்டிலும் 10 காசுகள் குறைந்து கிலோ வெள்ளி ரூ.74 ஆயிரத்து 900 ஆக உள்ளது. இருப்பினும் கடந்த 10 நாள்களுடன் ஒப்பிடும்போது, வெள்ளி விலை கிராம் ரூ.1.40 காசுகள் என ரூ.1500 வரை அதிகரித்துள்ளது.

நாட்டின் மற்ற நகரங்களான ஹைதராபாத், டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. எனினும் விலையில் சில வேறுபாடுகள் காணப்படும்.

இதையும் படிங்க : உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?

Last Updated : Jul 6, 2021, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.