சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதி கழிவறையில் நேற்று (அக்.3) தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் சென்னையை சேர்ந்த திருமுருகன் என்பவரை சந்தேகத்தில் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அவா் உள்ளாடைக்குள் 524 கிராம் தங்கப்பசை இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தபோது, சாா்ஜாவிலிருந்து வந்த விமான பயணி ஒருவா் கொடுத்ததாகக் கூறினாா். இதையடுத்து அந்த பயணியையும் சுங்கத்துறை கைது செய்தனா்.
மேலும் இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனை செய்தனா். இலங்கையை சோ்ந்த மாலா தமயந்தி என்ற பெண் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 640 கிராம் தங்கப்பசையை கைப்பற்றி, அந்த பெண்ணையும் கைது செய்தனா்.
சென்னையிலிருந்து சாா்ஜா செல்லும் ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானபயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த 2 பயணிகள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.15.7 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் கரன்சிகளை பறிமுதல் செய்தனா். இவ்வாறு சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் தங்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையை சோ்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை சுங்கத்துறையினா் கைது செய்தனா்.
இதையும் படிங்க: இரண்டாம் நாள் தொடர்ந்த சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் - ரூ.70 லட்சம் வரை இழப்பு!