ETV Bharat / city

மக்களை காக்க, மழைநீர் பணிகளை விரைந்து முடிக்கவும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல் - G K Vasan

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்து மக்களை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 19, 2022, 6:57 AM IST

சென்னை: இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாநகரில் தற்பொழுது ஒருசில மாதமாக மழைநீர் வடிகால் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அவை முழுமை பெறாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கின்றன. அவை மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தீபாவளி பண்டிகையொட்டி சென்னை வாழ் மக்களும், அண்டை மாவட்டங்களில் இருந்தும், பொது மக்கள் ஆடை ஆபரணங்களும் மற்றும் பல்வேறு பொருள்கள் வாங்க சென்னைக்கு வருகின்றனர். சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியால், போக்குவரத்து மாற்றத்தாலும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதோடு, மழைநீர் வடிகால் பணியில் பல்வேறு இடங்களில் இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டு பணி முடிவு பெறாமல் இருப்பது பார்ப்போரை பயத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

பண்டிகை காலம் என்பதால் மக்களின் போக்குவரத்து, அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிறிதாக மழை பெய்தாலும் தேங்கியுள்ள மழைநீரில், பயத்தினால் வாகனத்தை இயக்குவதற்கு மக்கள் தயங்குவதால் வெகுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலை போக்குவரத்திலேயே பல மணிநேரம் வீணாகிறது. வடிகால் பணி நடைபெறுவதால், சாலைகள் சேறும் சகதியாக இருக்கும் இடங்களில் வாகனங்கள் வழுக்கி விபத்து ஏற்படவும், அதனால் உயிர்சேதம் ஏற்படவும் மிகுந்த வாய்ப்புள்ளது.

ஆகவே, விபத்தால் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிகமான மழையின்போது, மக்கள் இயல்பு வாழ்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றிற்கு தமிழ்நாடு அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் துரிதமாக செயல்பட்டு மழைநீர் வடிகால் பணியையும், துண்டுதுண்டாக நிற்கும் பணியையும் முழுமையாக முடிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.