சென்னை: திருவொற்றியூரில் சினேகபாரதி சமூக நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற பாரதியார், வ.உ.சிதம்பரனார் விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "புதிதாக பரவிவரும் ஒமைக்ரான் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மேலும், ஒமைக்ரான் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.
அதிமுக கூட்டணியில் தமாகா
மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல்துறை இத்தகைய செயல்களில் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறை பணிகளை முடக்கிவிடாமல், மத்திய நெடுஞ்சாலை துறையோடு கலந்து பேசி பணிகளை தொடர வேண்டும். மேலும், நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக கூட்டணியிலேயே தொடருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: Vaccination for children: ஜனவரி 3-ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி - பிரதமர்