ETV Bharat / city

கஞ்சா போதையில் இளைஞர்கள்... ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி... - Tambaram Police Control Room

தாம்பரம் அருகே கஞ்சா போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை காவல் துறை கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 17, 2022, 8:05 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மை, நேற்று(செப்.16) இரவு 4 பேர் கொண்ட கும்பல் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் டெல்லியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை தகவல் சென்றுள்ளது.

அதனைக் கண்டு அதிர்ச்சடைந்த வங்கி ஊழியர்கள், இது குறித்து உடனடியாக தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ரோந்து பணியில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே சென்றனர். அங்கு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் கையில் சுத்தி மற்றும் உளி ஆகிய பொருட்களுடன் நடந்து சென்ற நான்கு பேரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா போதையில் இளைஞர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

இதையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சீர்காழியை சேர்ந்த ராஜேஷ்குமார்(22), பொத்தேரியை சேர்ந்த அன்பழகன்(19), மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(20), சோழிங்கநல்லூரை சேர்ந்த அருண்குமார்(20) என தெரியவந்தது.

விசாரணையில், நான்கு பேரும் கஞ்சா அடித்து விட்டு போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் இயக்குனரகம் புதிதாக தோற்றுவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.