ETV Bharat / city

மெட்ரோவில் மேளதாளத்துடன் பயணம்...

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அண்மையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஃப்யூஷன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது குறித்த சிறப்பு தொகுப்பு...

மெட்ரோவில் ஃப்யூஷன் நிகழ்ச்சி
மெட்ரோவில் ஃப்யூஷன் நிகழ்ச்சி
author img

By

Published : Dec 25, 2019, 1:03 PM IST

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக டிசம்பர் 18ஆம் தேதியிலிருந்து ஜனவரி 1ஆம் தேதி வரை சென்ட்ரல், கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, ஆலந்தூர், கிண்டி, அசோக் பில்லர், திருமங்கலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஃப்யூஷன் தமிழிசை கச்சேரி, பறையாட்டம், பரதநாட்டியம், டிரம்ஸ், நாதஸ்வரக் கச்சேரி, குழந்தைகள் உரிமை குறித்த தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள், ரயில் நிலையங்களில் மட்டுமே நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி ரயிலுக்குள்ளேயே இசைக்கச்சேரி நடைபெற்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது மனஅழுத்தத்தை மறந்து மகிழ்ச்சியடைந்தனர்.

ஆன் த ஸ்டிரீட்ஸ் ஆப் சென்னை அமைப்பினரின் இசைப்பயணம்

இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் "ஆன் த ஸ்டிரீட்ஸ் ஆப் சென்னை" என்ற அமைப்பினர் ஆவர். இவர்கள் பொது இடங்களில் வார இறுதி நாட்களில் ஒன்றுகூடி இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே மெட்ரோவிலும் இசைக் கச்சேரி நடத்தினார்கள். வயலின், புல்லாங்குழல், கீபோர்டு உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து குழுவாக இணைந்து பாடிய இவர்கள் ஒட்டுமொத்த பயணிகளின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இது குறித்து அந்த அமைப்பினரில் ஒருவரான செந்தில் ராஜன் கூறுகையில், "இதற்காக கட்டணமோ பணமோ நாங்கள் பெறுவதில்லை. இசை மூலம் மகிழ்ச்சியை பரப்புவது மட்டுமே எங்கள் நோக்கம். நாங்கள் வழக்கமாக செல்லும் கஃபேவில் சோர்ந்திருந்த மக்கள், இசையை கேட்டதும் உற்சாகமடைந்ததைக் கண்டு 'ஆன் த ஸ்டிரீஸ்ட்ஸ் ஆப் சென்னை' அமைப்பை உருவாக்கும் எண்ணம் உருவானது" என்றனர்.

இதையும் படிங்க:

சரியும் மரங்களும் வளரும் கட்டிடங்களும் - மெட்ரோ நகர் மும்பை!

Intro:Body:
சென்னை:

பளபளக்கும் கண்ணாடிகளுடன் மெட்ரோ ரயில் சத்தமில்லாமல் பயணிக்கும். அதில் பயணிக்கும் பயணிகளும் சத்தமில்லாமல் அமைதிகாவே இருப்பர். ஆனால் நேற்று (21.12.2019) சற்று வித்தியாசமானது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் சென்ற மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களைக் கொண்ட இளைஞர் பட்டாளம் இசை கருவிகளைக் கொண்டு உற்சாகமாக இசைத்தும், பாட்டு பாடியும், நடனமாடியும் ரயிலை கலகலப்பாக மாற்றினர். இதனைக் கண்ட இளைஞர்களும், இளம் பெண்களுக்கு தாளத்திற்கு ஏற்ப ஆட்டம் போட்டனர், குழந்தைகள் மழலை குரலுடன் பாடல்களை சேர்ந்து பாடி காண்போரை வியப்பில் ஆழ்த்தின. வயதானவர்களும் இதனை இடைஞ்சலாக கருதாமல் ரசித்து மகிழ்ந்தனர். அன்றாட வேலைப் பழு காரணமாக மன அழுத்தத்துடன், சோர்வுடனும் பயணிக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "ஆன் த ஸ்டிரீஸ்ட்ஸ் ஆப் சென்னை" என்ற அமைப்பு மூலம் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் வார இறுதி நாட்களில் பொது இடங்களில் ஒன்று கூடி பாட்டு பாடி, இசை கருவிகளை இசையும் மக்களை மகிழ்வித்து வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மெட்ரோ மியூஸிக் ஃபேஸ்டின் ஒரு பகுதியாக நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை சென்ற ரயலில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதற்காக அவர்கள் கட்டணமோ பணமோ பெறுவதில்லை. இசை மூலம் மகிழ்ச்சியை பரப்புவது மட்டுமே எங்கள் நோக்கம் என்கிறார்கள் ஆன் த ஸ்டிரீஸ்ட்ஸ் ஆப் சென்னை அமைப்பைச் சேர்ந்தவர்கள். நாங்கள் வழக்கமாக செல்லும் கஃபேவில் சோர்ந்திருந்த மக்கள் இசையை கேட்டதும் உற்சாகமடைந்ததைக் கண்டு ஆன் த ஸ்டிரீஸ்ட்ஸ் ஆப் சென்னையை உருவாக்கும் எண்ணம் உருவானதாக இதனை தோற்றுவித்தவர்களின் ஒருவரான செந்தில் ராஜ் கூறுகிறார். பாடல்களுடன் மக்களுக்கு பயணளிக்கும் கருத்துக்களை சொல்லி வருவதாக கூறிகிறார் அவர். இதன்மூலம் மேலை நாடுகளைகப் போல சென்னையிலும் வீதி இசை பிரபலமாகத் தொடங்கியுள்ளது. பல்வேறு வசதிகள் இருந்தாலும் மெட்ரோ ரயலில் விதிக்கப்படும் கட்டணம் சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாவதில்லை. இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் மக்கள் பயன்பாட்டை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில இந்த இசை கச்சேரி நிகழ்ச்சி நிச்சயம் அனைவரையும் கவரும்.

விஷ்வல் ராப் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஆன் த ஸ்டிரிஸ்ட் அமைப்பு நிறுவனர், இசை கலைஞர்கள் பேட்டி, பொதுமக்கள் பேட்டி, ரிப்போர்ட்டர் பி2சி ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது. பயன்படுத்திக்கொள்ளவும். Conclusion:visual in wrap
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.