ETV Bharat / city

10 லட்சம் இளைஞர்களுக்கு 'பைத்தான்' திறன் பயிற்சி - இலவச பைத்தான் பயிற்சி

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களிடையே நிலவும் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதில் தொழில்நுட்பத்திற்கான, தேசிய கல்வி கூட்டணி (நீட்) தளம் குறிப்பிடத்தக்க அறிவு அடிப்படையிலான தேவையை நிறைவேற்றும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

Chennai IIT
Chennai IIT
author img

By

Published : Jan 5, 2022, 6:31 AM IST

நாட்டிலுள்ள மாணவர்களுக்கு நன்கு உருவாக்கப்பட்ட பாடப் பிரிவுகளை வழங்குவதற்கு, கல்வி தொழில்நுட்ப தீர்வுகள், தொழில்நுட்பத்துக்கான தேசியக் கல்விக் கூட்டணி 3.0 என்ற தளத்தை, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) மாநில மொழிகளில் தயாரித்த தொழில்நுட்ப புத்தகங்களை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், "பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களிடையே நிலவும் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதில் தொழில்நுட்பத்திற்கான, தேசிய கல்வி கூட்டணி (நீட்) தளம் குறிப்பிடத்தக்க அறிவு அடிப்படையிலான தேவையை நிறைவேற்றும்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "வேலைவாய்ப்புத் திறன்களை ஊக்குவிக்கவும், எதிர்கால தேவைகளுக்கு நமது இளைஞர்களை தயார்ப்படுத்தும் வகையிலான பாடங்களை, திறன் இந்தியா அமைப்புடன் இணைந்து நீட் தளத்தில் பாடங்களை ஏஐசிடிஇ சேர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

குவி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாலமுருகன் பேட்டி

10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி

இது குறித்து குவி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாலமுருகன் கூறும்போது, "அகில இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனத்துடன் இணைந்து, பைத்தான் திட்டத்தில் மாணவர்களுக்கு தொழில்நுட்பங்கள் குறித்து கற்பித்து வருகிறோம்.

மேலும், மத்திய அரசுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் திறன்களை வளர்க்கும் கல்வியை கற்பிக்கும் திட்டத்தில் இணைந்துள்ளோம். இதன் மூலம், 10 லட்சம் இளைஞர்களுக்கு பைத்தான் மற்றும் செயற்கை தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீலகிரி செல்ல தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.