திருவள்ளூர்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக பழங்குடியினருக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.
367 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூபாய் 1.06 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமிய கலைக்கூத்து, சிலம்பாட்டம், வாள்வீச்சு சுற்றுதல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயிலில் 'நெல்லைக் காத்த திருவிளையாடல்' நிகழ்ச்சி