ETV Bharat / city

'கொலை வழக்கில்' 4 பேருக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு - SENTENCED LIFE

சென்னை: அம்பத்தூரில் உறவினரை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவரை கொலை செய்த வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை செய்த வழக்கில்
author img

By

Published : Jul 31, 2019, 12:54 AM IST

சென்னை அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன்(30). இவரது உறவினர் ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் கிண்டல் செய்துள்ளது. இதனை நிரஞ்சன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், நிரஞ்சனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

நான்கு பேருக்கு ஆயுள் தணடனை  பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு  MUDDER CASE  POONAMALLE COURT  JUDGEMENT
கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்

இந்நிலையில் கடந்த 6.8.2013 அன்று நிரஞ்சன் வீட்டிற்கு சென்ற நான்கு பேரும், நிரஞ்சனை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அம்பத்தூரைச் சேர்ந்த வினோபா(24), ராஜரத்தினம்(24), ராஜேஷ்(29), பார்கவ்(23) ஆகிய நான்கு பேரை கைது சிறையில் அடைத்தனர்.

நான்கு பேருக்கு ஆயுள் தணடனை

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி அம்பிகா தீர்ப்பு வழங்கினார். இதில், நான்கு பேர் மீதும் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Intro:அம்பத்தூரில் உறவினரை கிண்டல் செய்ததை தட்டிகேட்டவரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

Body:அம்பத்தூர் அடுத்த ஒரகடம், நாதமுனி 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நிரஞ்சன்(30), இவரது உறவினரை சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனை நிரஞ்சன் தட்டிக்கேட்டுள்ளார் அப்போது அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து கொண்டு நிரஞ்சனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இந்த நிலையில் 6.8.2013 அன்று இரவு நிரஞ்சன் வீட்டிற்கு சென்ற 4 பேர் கொண்ட கும்பல் நிரஞ்சனை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். Conclusion:இந்த கொலை சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்பத்தூரைச் சேர்ந்த வினோபா (என்ற)அப்பு(24), ராஜரத்தினம்(24), ராஜேஷ்(என்ற) தாஜ்(29), பார்கவ் (என்ற) புஜ்ஜி(23), ஆகிய 4 பேரை
கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3 ல் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் 4 பேர் மீதும் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற 4 பேரும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் அந்தமான் முருகன் ஆஜராகி வாதாடினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.