ETV Bharat / city

சென்னையில் பைக் ரேஸ்: 4 இளைஞர்கள் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிய 4 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பைக் ரேஸ்
பைக் ரேஸ்
author img

By

Published : May 3, 2022, 7:26 AM IST

சென்னை: அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் ஓட்டியுள்ளனர். இதனைக் கண்ட அடையாளம் தெரியாத நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், தி.நகரை சேர்ந்த ஹரிகரண் (20) மற்றும் மணிகண்டன் (22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பைக் ரேஸ்

இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய் (19), அயனாவரத்தை சேர்ந்த ஜான் ஜெபகுமார் (20) ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்து, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்காக நேப்பியர் பாலம் முதல் அடையார் திருவிக நகர் பாலம் வரை தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சாகசம் மற்றும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியதாக 45-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.