ETV Bharat / city

'உண்மையைப் பேச வேண்டும் என்பதற்காக திமுகவிலிருந்து விலகினேன்' - பழ. கருப்பையா பிரத்யேகப் பேட்டி! - கிஷோர்

சென்னை: எழுத்தாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழ. கருப்பையா திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

karuppaiah
karuppaiah
author img

By

Published : Dec 12, 2019, 5:37 PM IST

இதுதொடர்பாக, ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பழ. கருப்பையா அளித்த சிறப்புப் பேட்டியில், ' ஒரு கட்சி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக தனியார் முகவர்களை பயன்படுத்துவது தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை. எதைச் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று மக்களை ஏமாற்றும் யுக்திகளை அந்நிறுவனங்கள் பின்பற்றுவார்கள். இது நம் நாட்டு அரசியலுக்கு நல்லதல்ல. நடிகையை வைத்து சோப்பை விளம்பரப்படுத்துவது போல் கார்ப்ரேட் முகவர்களை வைத்து கட்சிகளை விளம்பரம் செய்வது தவறு. உண்மை இல்லாத ஒன்றை உண்மை போல், தோற்றம் செய்வது கார்ப்ரேட்டின் செயல்கள் ' எனத் தெரிவித்தார். மேலும்,

' அரசியல் என்பது கொள்கை சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வணிக நிறுவனங்கள் இல்லை. மக்களின் அதிருப்திப் போக்கை ஆய்வுகள் மூலம் அறிய முடியும். திமுகவின் அடிப்படைக் கொள்கை, மொழி சார்ந்து தான். ஆனால், முன்பு இருந்த முனைப்பு தற்போது திமுகவிடம் இல்லை.

அதிமுக, திமுகவிற்கு மாற்றாக காட்சிகள் உருவாக வேண்டும். உருவாகும். சிறு கட்சிகள் அனைத்தும் கூட்டணி என்ற பெயரில் கேள்வி கேட்கும் திறனையே இழந்துவிட்டனர். உண்மையை, கொள்கையைச் சொல்லித்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை வளர்ந்தன. நானும் உண்மையைப் பேச வேண்டும் என்ற காரணத்தால்தான் திமுகவிலிருந்து விலகியுள்ளேன்' என்றும் அவர் கூறினார்.

திமுகவிலிருந்து விலகிய பழ. கருப்பையா

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த பழ. கருப்பையா, பின்னர் அதிமுகவில் இணைந்து கடந்த 2011 - 2016 கால கட்டத்தில் சென்னைத் துறைமுகம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வானவர். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலை நடக்கத்தான் செய்யும் - ஜான்பாண்டியன்

Intro:Body:முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான பழ.கருப்பையா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஈ.டிவி பாரத் செய்திகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கையில், ஒரு கட்சி தன்னை முன்னிலை படுத்தி கொள்வதற்காக ஏஜன்சியை பயன்படுத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறை. எதை சொன்னால் மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்று கார்ப்ரேட் மக்களை ஏமாற்றும் யுக்த்திகளை பின்பற்றுபவர்கள். இது நாட்டு அரசியலுக்கு நல்லது இல்லை. நடிகையை வைத்து சோப்பை விளம்பரம் படுத்துவது போல் கார்பரேட் ஏஜன்சியை வைத்து கட்சிகளை விளம்பரம் செய்வது தவறு.உண்மை இல்லாத ஒன்றை உண்மை போல் தோற்றம் செய்வது கார்பரேட்டின் செயல்கள் என தெரிவித்தார்.

மேலும் அரசியல் கொள்கை சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வணிக நிறுவனங்கள் இல்லை. மக்களின் அதிருப்தி போக்கை ஆய்வுகள் மூலம் அறிய முடியும். ஆனால் மக்கள் எதை சொன்னால் வாக்களிப்பாரோ என்று சொன்னால் அது உண்மைக்கு மாறானது.

அதிமுக, திமுக மாற்று காட்சிகள் உருவாக வேண்டும், உருவாகும். எல்லா சிறு கட்சிகளும் கூட்டணி என்ற பெயரில் இனைந்து அவர்கள் கேள்வி கேட்கும் தன்மையை இழந்துள்ளனர்.

கொள்கை சொல்லிதான் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வளர்ந்துள்ளன. நான் உண்மையை பேச வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த விலகல்.

திமுக அடிப்படை கொள்கை மொழி சார்ந்து தான். ஆனால் முன்பு இருந்த முனைப்பு தற்போது இல்லை என்னும் விமர்சனத்தை முன் வைத்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.