சென்னை விமான நிலையத்திற்கு பெரியளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு செல்லவிருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த தஸ்லிமா பானு(29) என்பவரை சுங்கத்துறையினர் விசாரித்தனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து நாட்டு பவுண்டுகளை மறைத்து கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிரான வழக்கு - ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!