சென்னை: விமான நிலையம் பகுதியில் இன்று அதிகாலை திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.
அதனால் விமான நிலையத்தின் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் காற்றில் பறந்தன. அப்போது பன்னோக்கு விமான முனையத்திலிருந்து துபாய்க்கு சிறப்பு பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. இதனால் அந்த விமானமும் புறப்படாமல் சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்பின்பு சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 4 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. அதைப்போல ஹாங்காங்கிற்குச் செல்ல வேண்டிய லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் சரக்கு விமானமும் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.