ETV Bharat / city

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் கிடுகிடு உயர்வு...! பயணிகள் அதிர்ச்சி...!

சென்னை: விமான பயண கட்டணம் திடீரென உயர்ந்ததால், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லயிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

flight-ticket-increase
flight-ticket-increase
author img

By

Published : Nov 12, 2020, 4:41 PM IST

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கரோனா ஊரடங்கு நீடித்தபோதிலும் சொந்த ஊருக்குச் சென்று தீபாவளியை கொண்டாட அனைவரும் ஆர்வமாக உள்ளனர். பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவா்கள் விமானங்களில் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

பொது மக்களின் தீபாவளி பயணத்தை பயன்படுத்திய விமான நிறுவனங்கள், நாளை (நவம்பர் 13) வரை கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளன. சென்னையிலிருந்து மதுரை செல்ல வழக்கமாக ரூ.3,500க்குள் கட்டணம் இருக்கும். ஆனால், தற்போது 6 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதுவே பிசினஸ் கிளாஸ் என்ற உயர் வகுப்பில் ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ. 3 ஆயிரமாக கட்டணம் இருக்கும். தற்போது ஐந்தாயிரத்திலிருந்து 7 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. திருச்சிக்கு வழக்கமாக ரூ. 2,500 வசூலிக்கப்படும். தற்போது ரூ. 3,500லிருந்து ரூ. 7ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
சேலத்துக்கு ரூ. 2,300 குறைந்தப்பட்ச கட்டணத்தில் இருந்து ரூ. 3,900 வரை வசூலிக்கப்படுகிறது.

மேலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா, ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 13ஆம் தேதி வரை இந்த கூடுதல் கட்டணம் இணையதளத்தில் காட்டுகிறது. தீபாவளி தினமாக நவம்பர் 14ஆம் தேதியிலிருந்து பழைய கட்டணமே இணையதளத்தில் காட்டுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.