சென்னை ஆரியபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் அருள். சென்னை மாநகர காவல்துறையின் டெக்னிக்கல் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவலர் அருள் தனது முதல் திருமணத்தை மறைத்து கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாவதாக ராஜேஸ்வரி (30) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். காவலர் அருளிற்கு திருமணமாகி, விவகாரத்து ஆன விஷயம் ராஜேஸ்வரிக்கு தெரியவந்ததை அடுத்து ஆத்திரத்தில் காவலர் அருளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, காவலர் அருள் ராஜேஸ்வரியை தாக்கிவிட்டு பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பட்டினம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் ஆர்.டி.ஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேப் போல், சென்னை மாம்பலத்தில் குடும்ப தகராறில் கோகுல லட்சுமி(24) என்ற பெண்ணும், தியாகராயநகரில் சந்திரசேகர்(30) என்ற நபரும், தேனாம்பேட்டையில் ஆட்டோ டிரைவரான விஜயகுமார்(40) என்பவரும், அசோக் நகரில் ஆட்டோ டிரைவரான சுரேஷ்(30) என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாநகரில் பல்வேறு பகுதியில் நடந்த இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை - ராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு!