ETV Bharat / city

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரூ.352.85 கோடி பேரிடர் நிவாரண நிதி - புதுச்சேரி வெள்ளப்பெருக்கு நிவாரண நிதி

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ. 1,664.25 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

five-states-including-tamilnadu-to-get-over-rs-1600-crore-as-additional-central-assistance-under-ndrf

author img

By

Published : Mar 3, 2022, 12:36 PM IST

டெல்லி: 2021ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு/நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.352 கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ. 17 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நிதியுதவி மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு அப்பாற்பட்டது.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணம், சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற ரூ.6,230.45 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் நிதி வழங்கப்பட்ட ஐந்து மாநிலங்கள்

  • ஆந்திர பிரதேச மாநிலம்: ரூ.351.43 கோடி
  • இமாச்சல பிரதேச மாநிலம் ரூ.112.19 கோடி
  • கர்நாடக மாநிலம் ரூ.492.39 கோடி
  • மகாராஷ்டிரா மாநிலம் ரூ.355.39 கோடி
  • தமிழ்நாடு மாநிலம் ரூ.352.85 கோடி
  • புதுச்சேரி ரூ.17.86 கோடி

இதையும் படிங்க: தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்காக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.