ETV Bharat / city

5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வருகை - சென்னை வந்த கோவிஷீல்டு தடுப்பூசிகள்

புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
author img

By

Published : Aug 24, 2021, 9:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

புனேவில் இருந்து வந்த தடுப்பூசிகள்

மேலும், தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்ற ஒன்றிய அரசு, தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது புனேவில் இருந்து விமானம் மூலம் 42 பார்சல்களில், 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள்

இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

தற்போது, மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள், இந்த தடுப்பூசிகளை பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 70 விழுக்காடு ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.